பியூஸ் மானுஷ் தலைமையில் இயங்கும் சேலம் மக்கள் குழுவை சேர்ந்த முக்கிய நிர்வாகியாக இருப்பவர் மீனா சேது. இவர் நடத்தும் கோல்டன் கேட்ஸ் பள்ளி நீர் நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீர் நிலை நிலத்தில் 50 சென்ட் வரை ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் மற்றும் நுழைவாயில் கட்டியுள்ளதாக தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்  நடத்தப்பட்டது.

இந்நிலையில் நிலம் ஆக்கிரமிப்பு செய்தது உண்மை என்றும் 12 வருடங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் மீனா சேது ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த நிலத்தை ஒப்படைக்க தயார் என்றும் கூறினார்.

இந்நிலையில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த மீனா சேது மீது கிரிமினல் வழக்கு பதிய தர்ணா போராட்டம் நடத்தியவர்களை சேலம் போலீசார் கைது செய்தனர்.