எவிடென்ஸ் கதிர்

மிகவும் துயரத்துடன் இருக்கிறேன். தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம் சாலியமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தோட்டி – தலித் சமூகத்தை இருந்த கலைச்செல்வி என்கிற 20 வயது பெண்ணை ராஜா, குமார் என்கிற இரண்டு சாதி இந்துக்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்து உள்ளனர். அந்த பெண்ணின் வாயில் கிழிந்து போன ஜட்டியை வைத்து அடைத்து காய் கால்களை கட்டி போட்டு கடுமையாக அடித்து சித்ரவதை சித்து கொலை செய்து உள்ளனர். இந்த கிராமம் பூண்டி வாண்டையார் வசிக்கும் கிராமம். அய்யா.. வருடத்திற்கு இந்த பகுதியில் மட்டும் 15 – 20 பெண்களை ஆதிக்க சாதி இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்கின்றனர். போலீஸ் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. நாங்கள் உணர்ச்சி அற்று பிணங்களாக வாழ்ந்து வருகிறோம் என்கின்றனர்.

சுவாதி படுகொலைக்கு எதிராக பெரிய அளவில் கொந்தளித்த நாம் கலைச்செல்வி படுகொலைக்கு அமைதியாக இருக்கிறோம். செய்தி கூட வெளியே வரவில்லை. வெட்கமாக இருக்கிறது. நீதியின் குரலில் அடிக்கும் பாகுபாட்டின் வாடை 10 நாட்கள் அழுகிப்போன பிண வாடையைவிட நாறுகிறது. சுடுகாட்டில் புதைக்கப்பட்ட கலைச்செல்வி, “நீங்களும் பிணங்கள்தான் ஆனால் நான் புதைக்கப்பட்டு விட்டேன். நீங்கள் புதைக்கப்படவில்லை. இது ஒன்றுதான் வேறுபாடு” என்று சொல்லுவது போன்று இருந்தது.

சாரி கலைச்செல்வி, நீ பெரிய சாதியில் பிறந்து இருக்கவேண்டும். நகரத்தில் வசித்து இருக்க வேண்டும். ஐ.டி பணி செய்து இருக்கவேண்டும். ஆனால் நீயோ எளிய சாதியில் பிறந்து இருக்கிறாய். என்ன செய்வது?

எவிடென்ஸ் கதிர், சமூக செயற்பாட்டாளர்.