எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் குறித்தான பதிவுகளை காத்திரமாக பதிவு செய்து வருகிறார். அவரிடம் நாம் உரையாடியதன் வீடியோ பதிவு இங்கே…

இந்தப் பதிவில் தான் எழுத வந்ததன் பின்னணியையும் முதல் நூலான மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் எழுதும்போது ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார்…