செவ்வாய்கிழமை நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதற்கு முழுமுதல் காரணம் அம்மாதான் என எம்எல்ஏ ராமு பேசினார். இதற்கு முகநூலில் வந்த எதிர்வினைகள் சில…

Abdul Hameed Sheik Mohamed

“அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதற்கு முழுமுதல் காரணம் முதலமைச்சர்தான் என்று சட்டப்பேரவையில் குன்னூர்எம்எல்ஏ ராமு பாராட்டினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தாகவும், அதன் எதிரொலியே இன்று தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா – ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பதாக உலகம் இன்று புகழ்ந்து கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமை சக்தியை புரிந்து கொண்ட ஹிலாரி கிளிண்டன், முதலமைச்சர் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அ.தி.மு.க. உறுப்பினர் ராமு மகிழ்ச்சியோடு தெரிவித்தார் . அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்தனர்.” – செய்தி,

இவ்வளவு ஏன் இந்திராகாந்தி, மார்க்கெரெட் தாட்சர், ஷேக் ஹஸீனா, பெனாஸிர் பூட்டோ எல்லாம் ஜெயலலிதாகிட்ட சின்ன வயசுல ட்யூசன் படிச்சவங்க…மம்தா பானர்ஜி, மாயாவதி எல்லாம் அம்மாகிட்ட கமர்கட் வாங்கி சாப்பிட்டே அரசியல் ஞானம் பெற்றவங்க…ஹிலாரிக்கே கில்லியா இருந்தவங்க சசிகலா புஷ்பத்துகிட்ட சறுக்கிட்டாங்களேங்குறத நினைகிறப்பத்தான் தாங்க முடியலை ராமு..

Jeyannathann Karunanithi

“அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதற்கு முழுமுதல் காரணம் முதலமைச்சர்தான் சட்டப்பேரவையில்குன்னூர் எம்எல்ஏ ராமு பாராட்டினார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தாகவும், அதன் எதிரொலியே இன்று அமெரிக்க தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா – ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பதாக உலகம் இன்று புகழ்ந்து கொண்டிருப்பதாகவும், இந்த சந்திப்பின் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமை சக்தியை புரிந்து கொண்ட ஹிலாரி கிளிண்டன், முதலமைச்சர் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதாக மகிழ்ச்சியோடு அ.தி.மு.க. உறுப்பினர் ராமு தெரிவித்தார்” – ‪#‎செய்தி‬

‪#‎மீள்பதிவு‬

திறமை , விசுவாசம்

இவ்விரண்டையும் தெளிவாய்க் குழப்பிக்கொள்வதில் , தமிழ் கூறும் நல்லுலகை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது .

விசுவாசத்தில் தன்னை மிஞ்ச ஆளே இல்லையென நினைத்தால் , மக்களவை , மாநிலங்களவைக்குச் சென்று , நேரம் , பணம் , மிச்ச சொச்ச மானம் யாவையும் காற்றில் பறக்கவிடுவதற்கு பதில் , பல்லின நாய்களுடன் போட்டியிடலாம் .

அக்கண்காட்சிகளிலும் திறமை வெகுவாய் மதிப்பீடு செய்யப்படுகின்றதென்பது வேறு கதை .

‪#‎அவமானம்‬

Saraa Subramaniam

‘ஹிலாரி’யஸ் அம்மாடா’ என்ற குன்னூர் எம்.எல்.ஏ. ராமுவின் கூற்றை விட ஆகப் பெரும் பாய்ச்சல் வேறேதுமில்லை என்று வியக்கிறார் ‪#‎அனானியன்‬

HK Nazar

முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த ஊக்கத்தின் அடிப்படையில்தான் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்….

தமிழக சட்டசபையில் மான்ய கோரிக்கை மீதான விவாதத்தின்போது குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமு பேச்சு…

‪#‎வாய்விட்டு‬ சிரித்தால் ‪#‎நோய்விட்டுப்‬ போகும்….

Kannan Chinnaraj

முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டி… சட்டப்பேரவையில் குன்னூர் அதிமுக எம்எல்ஏ ராமு பேச்சு… ‪#‎முடியலடா‬

Sahul Hameed

அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட முதலமைச்சர் அம்மா தான் காரணமாம்…

குன்னூர் எம்.எல்.ஏ

அடேங்கப்பா !!!!!

Natarajan Kembanur Karai Gowder

அமெரிக்க அதிபர் தேர்தல்ல ஹிலாரி கிளிண்டன் ஜெயிச்சா அங்க போயி ‘அம்மா ஆதரவு பெற்ற…..’ ன்னு போஸ்டர் ஓட்டுவீங்களா ஸ்டிக்கர் பாய்ஸ்?