இந்தியா இந்துத்துவம்

”நாங்கள் கடத்தப்படவில்லை” ஈஷா மையத்தின் மீதான புகார் குறித்து சாமியாரான பெண்கள் விளக்கம்

ஈஷா மையத்திலிருந்து தனது இரு மகள்களை மீட்டுத்தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ். இவரது மனைவி சத்தியஜோதி. சத்தியஜோதி, “எனது மூத்த மகள் கீதா லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்துள்ளார். நாங்கள் குடும்பத்தோடு ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்தோம். அப்போது எனது இரு மகள்களை மூளைச் சலவை செய்த ஜக்கி வாசுதேவ், அவர்களை நய வஞ்சகமாக ஏமாற்றியதோடு, திருமணம் நடக்காமல் இருக்க இருவருக்கும் மொட்டை அடித்து விட்டார். மேலும், அவர்களுக்கு காவி உடைகளை அணிவித்து சாமியாராக்கி ஆசிரமத்திலேயே தங்க வைத்துள்ளார். தற்போது எனது மகள்களை பார்க்கக்கூட அனுமதிக்க மறுப்பதுடன், எங்களது சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். இதுமட்டுமின்றி ஈஷாவிற்கு வருகின்றவர்களை கவர்வதற்காக எங்களது பெண்களை விற்பனையாளர்கள் போல் பயன்படுத்துகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் புகார் குறித்து சந்நியாசம் எடுத்துக்கொண்ட அந்தப் பெண்கள் இருவரும் விளக்கம் அளித்துள்ள வீடியோவை ஈஷா மையம் வெளியிட்டுள்ளது. அதில், பெற்றோரின் விருப்பப்படியே சந்நியாசம் எடுத்துக்கொண்டதாகவும் தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வீடியோ இணைப்பு கீழே..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s