திரு யோ

சக்கியின் ஆசிரமத்தில் நடப்பதன் பெயர் துறவறமா? சந்தேகத்திடமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில் மடியில் கனமில்லாத ‘துறவி’ சட்டத்தின் பார்வைக்குள் விசாரணைக்கு தனது மடத்தை திறந்து விடுவது எல்லாவற்றிற்கும் முடிவை தருமில்லையா?

கட்டுப்பாடான சூழலில் மூளைச்சலவை செய்து எப்படியெல்லாம் கார்ப்பரேட் சாமியார்கள் பலரையும் தங்களது காட்டிற்குள் வைத்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள் என்பதற்கு ஏற்கனவே பலர் உள்ளிருந்து வெளியே வந்து பதிவு செய்துள்ளனர். ஒருவரது கல்வி, வயது, அனுபவம் அனைத்தையும் கடந்து மூளைச்சலவை தந்திரம் ஆசிரமங்களில் வேலை செய்கிறது என்பதற்கு நித்தியானந்தா ஆசிரமத்தில் பிரதான இடத்தில் இருந்த ஆர்த்தியின் அனுபவங்கள் குறிப்பிடத்தக்க ஆதாரங்களில் ஒன்று. கார்ப்பரேட் ஆசிரமங்களில் போதைபொருட்கள் கலந்த உணவு வழங்கப்படுகிற குற்றச்சாட்டு புதிதுமல்ல.

கார்ப்பரேட் சாமியார்களின் இத்தகையக் குற்றங்களை ‘சுதந்திர உரிமை’ என்ற சிமிழிற்குள் அடக்குவதும். தத்துவ தேடல் என லேபிள் ஓட்டுவதும் எந்த வகை புரிதலோ?

சக்கியும் சாமியார் தானே? ஏன் தனக்கு மொடடையடித்து காவியுடுத்தி, ஜக்கியின் ஆசிரமத்தின் மற்ற ‘சந்நியாசிகள்’ போல வாழவில்லை? எதற்கு அத்தனை விலையுயர்ந்த ஆடைகள், வாகனங்கள், நீளமான முடியெல்லாம்? இதற்கும் தத்துவ தத்துபித்து விளக்கமுண்டா?

திரு யோ, சமூக-அரசியல் விமர்சகர்.