தீவிர சினிமாவைப் பேசும் இதழாக ஆரம்பிக்கப்பட்ட ‘நிழல்’ பின்னாளில் சினிமா பயிற்சி பட்டறைகள் நடத்தவும் தொடங்கியது. சினிமா துறை மீதான ஆர்வத்தில் கோடம்பாக்கத்தில் குவியும் பல இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இது அமைந்தது. இதற்கு கிடைத்த வெற்றியே, நிழல்-பதியம் அமைப்புகள் இணைந்து 2005 முதல் 2016 வரை 44 குறும்பட பட்டறைகளை தமிழகம் முழுவதும் நடத்தி 4500 கிராமப்புற இளைஞர்களுக்கு திரை தொழில்நுட்பத்தை தந்துள்ளது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் இன்று சினிமா, தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் 700பேர் வரை பணியாற்றி வருகின்றனர் என்கிறார் நிழல் திருநாவுக்கரசு.
nizhal
இதன் அடுத்த கட்டப் பயணமாக சென்னை வளசரவாக்கத்தில் nipfa என்ற ஃபிலிம் அகாடெமியை துவக்கி உள்ளது. இதில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, கேமரா, எடிட்டிங், மேக்கப் முதலிய பாடங்கள் குறைந்த ஒரே கட்டணத்தில் ஓராண்டு கல்வியை தருகிறது. தற்போது சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் பயன் பெறலாம்.