ஆர். எஸ். எஸ். அமைப்பின் முக்கியஸ்தரான எஸ்.குருமூர்த்தி, பாஜவைச் சேர்ந்த ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள இந்து ஆன்மீக கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.

இதில் வியாழக்கிழமை ‘மாத்ரு – பித்ரு வந்தனம் – ஆச்சார்ய வந்தனம்’ என்று தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நற்பண்புகளில் ஒன்றான ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை வணங்குதல் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர். அமிர்தா, பத்மா சேஷாத்ரி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 1008 பேர் இதில் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்களிடையே சுயமரியாதையைப் புதைத்து இந்துத்துவ கொள்கைகளை திணிப்பதாக பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Dhalapathi Raj

வெட்கக்கேடு!

இந்து ஆன்மிக சேவை என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவியர் பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நேற்று நடந்துள்ளது.

சுயமரியாதையை கற்றுத்தரவேண்டிய பள்ளிகளில் மாணவர்களை விட்டு ஆசிரியர்களின் கால்களை கழுவச்செய்வது சரியா?

1008 ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை – செய்தி

எங்க காலத்துல இல்லாத புதுவகை செய்முறை தேர்வு போலயிருக்கே…இது எந்த பாடத்துல வருது கல்வி அதிகாரிகளே..?

கையில் ஆளுக்கொரு மணியை குடுத்து ஆட்டச்சொல்லாததுதான் பாக்கி…

Thiru Yo

இவர்கள் ஆசிரியப்பணிக்கே அவமானம்!

Melvin Sathya

சுயமரியாதையை கற்றுத்தரவேண்டிய பள்ளிகளில் மாணவர்களை விட்டு ஆசிரியர்களின் கால்களை கழுவச்செய்வது மடமையிலும் மடமை