குஜராத்தில் தொடரும் தங்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து, அகமதாபாத்திலிருந்து உனா வரையான 10 நாள் பேரணியை இன்று தலித் மக்கள் தொடங்கினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் பங்கேற்றனர்.

‘விடுதலைக்கான பேரணி’ என்ற பெயரிட்டுள்ள இந்தப் பேரணியை தலித்துகளை ஒருங்கிணைக்கும் வகையில் நடத்துவதாக ஜிக்னேஷ் மெவானி தெரிவித்தார். சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் நாள் முடியும் இந்தப் பேரணி மூலம், இனியும் தங்கள் மீதான தாக்குதல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்துவதற்காக ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.