பெண்கள் வன்புணர்வு செய்யப்படுவதற்கு பிற்போக்குவாதிகள் ஆயிரம் காரணங்களைச் சொல்லவதுண்டு. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; பணிக்குச் செல்லக்கூடாது; இப்படியான உடைகளை அணியக்கூடாது என்று சொல்லிக்கொண்டே போவார்கள். முற்போக்குவாதிகள் இதைத் தடுக்க என்ன செய்யலாம் என சிந்திப்பார்கள். சமூக ஊடகங்களில் பெண்கள் படங்கள் பகிர்வது குறித்து முற்போக்குவாதியாக மங்கயர் மலர் இதழில் கருத்து சொன்ன வழக்கறிஞர் ஹன்ஸா, பெண் வன்புணர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணத்தை சொல்கிறார்.

“”கழிப்பிடம் இல்லாத்தால் புதர் பக்கம் காலைக்கடனுக்காக வந்த பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை”-செய்தி.

இதுக்குத்தான் எங்கூர் பக்கம் எல்லாம் பொட்டல், புதர் பக்கம் மோகினிப் பேய் சுத்துது. இளவட்ட ஆண்கள கண்டா விட மாட்டா-ன்னு புரளி வச்சிருந்தாங்க..

நாமதான் பஹூத் அறிவாளியாச்சே …

உண்மைய உடைச்சோம்.

எல்லா உண்மைகளும் எல்லோருக்குமானதல்ல.

*புரளியும் நல்லது” என்கிறார் இந்த வழக்கறிஞர்.

வழக்கறிஞரின் இந்தப் பதிவை பிரபல முகநூல் ட்ரால் பக்கம் பகடி செய்துள்ளது…

திருத்தம்: வழக்கறிஞரின் பெயர் ஹம்ஸா என தவறுதலாக முந்தைய பதிப்பில் குறிப்பிடப்பட்டது ஹன்ஸா என சரிசெய்யப்பட்டது.