மதுரையில் சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சோலைநாதன் என்ற தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி இதுகுறித்து தெரிவித்துள்ள தகவல்:

“விஷவாயு தாக்கி உயிரிழந்த ஆறு தொழிலாளிகளின் கொலைகளை மைய்யப்படுத்தி தொடங்கப்பட்ட எங்கள் ஆவணப்படம், இன்று விஷவாயு தாக்கி உயிரிழந்த மதுரை சோலைநாதன் கொலையோடு சேர்த்து ஏழு மாதத்தில் 20 கொலைகளாக,தொடர்கிறது உங்கள் ஒவ்வொருவரின் கொடூர மௌனத்தால்… இதுபோல் இன்னும் எத்தனை பேரை மலக்குழிக்குள் தள்ளி சாகடிக்க…”.

முகப்புப்படம்: முத்துச்செல்வம்