ஆரண்ய காண்டம் திரைப்படம் திரையிடல் சென்னை பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடக்கிறது.

07-08-2016, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

சிறப்பு அழைப்பாளர்: ஷாஜி (எழுத்தாளர், விமர்சகர், நடிகர்)

இதுகுறித்து ஏற்பாட்டாளர் தமிழ் ஸ்டுடியோ அருண் தெரிவித்தவை: “ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தற்போது தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது. நூறு தமிழ் படங்கள் திரையிடல் தொடங்கி இருக்கிறது. அதில் ஒரு படமாக தமிழின் மிக முக்கியமான படமான ஆரண்ய காண்டம் திரைப்படவிருக்கிறது. தமிழில் வெளியான நூறு திரைப்படங்களும், திரைப்பட ரசனை வளர்த்தல், அல்லது ஒரு சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடுதல் எனும் வகையில் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நூறு படங்களும் இலவசமாக திரையிடப்பட்டு அது பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது. பதிவு செய்யப்பட்ட திரைப்பட இயக்கம் என்கிற அடிப்படையில் இந்த படங்களை ஒரு குழுவாக பார்த்து விவாதிக்கும் கடமை தமிழ் ஸ்டுடியோவிற்கு இருக்கிறது. எனவே நல்ல படங்களை பார்க்க நண்பர்கள் அவசியம் திரண்டு வாருங்கள். திரையரங்க பிரதி தவிர்த்து, விருதுக்கு அனுப்பப்பட்ட பிரதியே திரையிடப்படுகிறது. இந்த பிரதியை வேறெங்கும் காணமுடியாது.”