ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் துணை அமைப்பான அகில பாரதிய கவ் சேவா சங் என்ற அமைப்பின் தலைவரான சங்கர் லால் (76), செல்போன் கதிர்வீச்சு பிரச்சினை தீர்வொன்றை சொல்லியிருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள், செல்போன் கதிர்வீச்சு அபாயத்தை தடுக்க செல்போனின் பின்புறத்தை சாணியால் மெழுகிய பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். இதை மக்களும் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்காக கோமியத்தை குடிக்கும் இவர், நாட்டு மாட்டின் சாணி, அற்புதங்கள் செய்யும் குணமுடையது என்றும் தானும் செல்போனை சாணியால் மெழுகிவிட்டே பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன அறிவியல் அடிப்படை உள்ளது என்ற கேள்விக்கு லால், அதுபற்றி தெரியவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.