அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தனது வீட்டில் தூக்குமாட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் முதலமைச்சராக நான்கரை மாதம் பதவி வகித்த அவர், சமீபத்திய ஆட்சி கழிப்பால் பதவி இழந்தார். அது முதல் அவர் விரக்தியான மனநிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கொண்டு இந்த மரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.