அரசியல்

சிறையில் 30 பேரால் தாக்கப்பட்ட பியூஸ் மானுஷ் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்? உண்மையறியும் குழு கேள்வி

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாக சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, மத்திய சிறையில் ஒரு வார காலம் அடைக்கப்பட்டிருந்த தன்னை சிறைக் காவலர்கள் 20, 30 பேர் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதாக பியூஷ் மானுஷ் புகார் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைத்துறை சார்பில் விசாரணை நடைபெற்றது.

இந்தநிலையில், தேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் உண்மை அறியும் குழு அமைத்து பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரித்தது. இந்த குழுவின் அறிக்கை சேலத்தில் வெளியிடப்பட்டது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் தேசிய மக்கள் இயக்கம்,

சேலம் மத்திய சிறையில் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உண்மைக் கண்டறியும் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு பியூஷ் மானுஷுடன் கைது செய்யப்பட்ட இருவரிடமும், சிறைக் கண்காணிப்பாளர், காவலர்களிடமும் விவரம் கேட்டறிந்தது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பியூஷ் மானுஷ் கண்ணியமாக நடத்தப்பட்டார். எந்தவிதத் தாக்குதலும் அவர்மீது நடக்கவில்லை. சிறையில் 30 பேர் தாக்கியதாகக் கூறும் பியூஷ் மானுஷ், இதுவரை எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறவில்லை. உண்மை கண்டறியும் குழுவின் விசாரணை அறிக்கை தமிழக முதல்வர், உள்துறைச் செயலர், காவல் துறைத் தலைவர், சேலம் மாநகர ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s