தலித்துகள் மீதான தொடர் தாக்குதல்களைக் கண்டித்து எழுச்சியுடன் தொடங்கிய குஜராத் தலித்துகளின் போராட்டம் சுதந்திர தினத்தில் உனா நகரில் முடிவுக்கு வந்துள்ளது.  ஆகஸ்டு 5-ஆம் தேதி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் தொடங்கப்பட்ட இந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தலித்துகள் 350 கிமீ தூரப் பயணத்தை மேற்கொண்டு உனா நகரில் முடித்தனர். உனா தலித் அட்யாச்சார் சமிதி அமைப்பு இந்த சுதந்திர யாத்திரையை ஒருங்கிணைத்தது.

இந்நிலையில் உனா நகரை நெருங்கியபோது, யாத்திரையில் பங்கேற்றவர்கள் ஊருக்குள் நுழைவதை ஒடுக்கும் சாதியினர் தடுத்துள்ளதோடு தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

இதனால் எளிதாக 10 கிமீ தூரத்தில் அடைய வேண்டிய இடத்தை 100கிமீ சுற்றி வந்து அடைய வேண்டிய சூழலுக்கு பேரணியில் பங்கேற்றவர்கள் தள்ளப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.