கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜோக்கர் திரைப்படம். ராஜு முருகன் இயக்கிய இந்தப் படத்தில் புதுமுகங்களான  குரு சோமசுந்தரம், காயத்ரி, ரம்யா பாண்டியன், பவா செல்லதுரை ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு நாளிதழ்களில் வெளியான ஒரு விளம்பரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திருட்டு விசிடியில் படம் பார்த்தால் அதற்குரிய பணத்தை இந்த அக்கவுண்டில் போட்டுவிடுங்கள் என ஜோக்கர் படத்தின் பெயரிலான வங்கிக் கணக்கு எண்ணுடன் அந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் பணம் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்ட பயன்படுத்தப்படும் என்றும் அந்த விளம்பரம் தெரிவிக்கிறது.