சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர் அபினவ் சூர்யா. சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டார்.  இயக்குநர் ரஞ்சித்துடன் எடுத்துக்கொண்ட படத்தை தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்து, பலர் அபினவ் சூர்யாவின் இன்பாக்ஸில் மிகக் கீழ்தரமான குறுந்தகவல்களை அனுப்பியுள்ளனர்.

“இடஒதுக்கீட்டில் வந்தவனே…உன் தலையை வெட்டி கூறுபோட்டு பன்றிக்குப் போட வேண்டும்!”

“சராசரி அறிவுகூட இல்லாத இடஒதுக்கீட்டில் வந்தவர்கள்” என்று தொடங்கி எழுத முடியா வசைகளை அனுப்பியுள்ளனர்.

அபினவ் சூர்யா, “இவையாவது பரவாயில்லை. என் தாயையும் என் சகோதரிகளையும் கீழ்த்தரமாக எழுதி அனுப்பிய குறுந்தகவல்கள் பகிர முடியாதை” என்கிறார்.

ஐஐடியில் நிலவி வரும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வன்மத்தைக் காட்டுகின்றன இந்தக் குறுந்தகவல்கள். தலித் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களின் பின்னணியுடன் இத்தகைய வன்மமான தாக்குதல்கள் இருப்பதை கவனிக்க வேண்டும்.