ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வெண்கலம் வென்றிருக்கிறார்.

58 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்ற சாக்‌ஷி, கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

ஹரியாணாவின் ரோதக் நகரின் அருகேயுள்ள மோக்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சாக்‌ஷி மாலிக். சாக்‌ஷி தன்னுடைய 10 வயது முதல் மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார் இவருடைய பயிற்சியாளர் ஐஸ்வர் சிங் தாஹியா. “அவருடைய கிராமமான கோக்ராவை அவர் பெருமையடைய வைத்துவிட்டார்” என்கிறார் பூரிப்புடன் ஐஸ்வர் சிங்.