#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜுக்கு லெனின் விருது: அனுராக் காஷ்யப் பங்கேற்கிறார்!

மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, சிறந்த ஆவணப்பட இயக்குனரான தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
தீபா தன்ராஜ், ஐதராபாத்தில் பிறந்தவர், சென்னை பெண்கள் கிறித்துவ கல்லூரியில் (1973) ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தில் (1975) இளங்கலை இதழியல் பயின்றவர். பட்டாபிராமி ரெட்டி மற்றும் எம்.எஸ்.சத்யு திரைப்படங்களில் உதவியாளராக 1980’இல் பணி புரிந்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படங்களில் பணி புரிந்து வருகிறார். மிக முக்கியமான ஆவணப்படப் படைப்பாளிகளில் ஒருவர். ஐம்பது ஆவணப்படங்களுக்கு மேல் உருவாக்கியுள்ளார், மற்றும் பயிற்சிக்கான திரைப்படங்கள் பல உருவாக்கியுள்ளார். விருது பெற்ற ஆவணப்படங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல தொடர் திரைப்படங்கள் இதில் அடங்கும். உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
1980 ஆண்டு முதல் பெண்களுக்கான இயக்கப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருபவர். கடந்த சில ஆண்டுகளாக; பெண்களின் நிலை, அரசியல் பங்கேற்பு, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்த செயலமர்வுகள் (workshops), கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் குழுக்களில் பங்கு பெற்றுவருகிறார். தென் கிழக்கு ஆசிய பெண் செயற்பாட்டாளர்களுக்குக் ஒளிப்பதிவு கற்பித்துள்ளார். ஊடக கோட்பாட்டில் (Media Theory) ஈடுபாடு கொண்டவர்.  பல கல்லூரிகள் உட்படப் பல்வேறு மன்றங்களில் பல விரிவுரைகள் கொடுத்துள்ளார். ‘சிறுபான்மை பெண்கள், குடியுரிமைக்காகப் பேச்சுவார்த்தை’ [Minority Women Negotiating Citizenship] என்ற பல்-மைய ஆய்வின் முன்னணி ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். கல்வி தொடர்பான பிரச்சினைகளிலும் ஆர்வமுண்டு, முதல் தலைமுறையாகக் கற்கும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் குறிப்பாக அதிக ஆர்வம்.
தீபாவின் சில திரைப்படங்கள்,
‘We’re still working’ (2013), ‘Invoking Justice’ (2011), ‘Enough of this Silence’ (2008), ‘The Advocate’ (2007), ‘Nari Adalat’ (2000), ‘Itta Hejje Mundakka Thegiya Bediri Hindakka’ (1995)- கிராம பஞ்சாயத்துகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்காக உருவாக்கப்பட்ட 12 தொடர் திரைப்படங்கள், ‘The Legacy of Malthus’ (1994), ‘Something like a War’ (1991), ‘Kya Hua Iss Shehar Ko’ (1986) மற்றும் ‘Sudesha'(1983).
1980’களில் ஆரம்பத்தில் ஆவணப்படத் திரைப்படைப்பாளியாக உருவெடுத்த தீபா தன்ராஜ், அந்தக் காலத்தின் முக்கியப் பிரச்சனைகளைத் தனது திரைப்படங்களில் கையாண்டார். சமூகத்தில் உள்ள பெண்களின் போராட்டங்களை ஆவணப்படுத்த, அவரது நண்பர்களுடன் இணைந்து ‘யுகாந்தர்’ என்ற திரைப்படக் கூட்டு முயற்சி இயக்கத்தைத் துவங்கினார். அவரது அனைத்துத் திரைப்படங்களுமே தீவிரமான ஆராய்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை, திரைப்படங்களின் தரத்தில் இவை தெளிவாகப் பிரதிபலிக்கும். அவரது பெரும்பாலான திரைப்படங்கள், பெண்களின் போராட்டம் மற்றும் மற்ற பாலின பிரச்சனைகள் குறித்ததே ஆகும்.

20-08-2016, சனிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு.

பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வழக்கமாக நிகழ்வுகள் நடைபெறும் பிரசாத் பிரிவியூ திரையரங்கம் அல்ல, பிரிவியூ திரையரங்கிற்கு அடுத்துள்ள பிரசாத் ரெக்கார்டிங் திரையரங்கில்) தொடர்புக்கு: 9840698236

சிறப்பு அழைப்பாளர்கள்:

இயக்குனர் அனுராக் காஷ்யப்

ஆய்வாளர் வ. கீதா

எழுத்தாளர் சாரு நிவேதிதா

இயக்குனர் லீனா மணிமேகலை

மற்றும்

B. லெனின்

நிகழ்வில் தீபா தன்ராஜின் முப்பது நிமிட ஆவணப்படம் ஒன்றும் திரைப்படவிருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s