இந்தியா இந்துத்துவம் மோடி அரசு வரலாறு

வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சுதந்திரத்துக்கான போராட்டம் 1857-ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து பிரிட்டீஷாரை நாம் தூக்கி எறிந்தோம். நாம் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பண்டிட் ஜவஹர்லால் நேரு, பகத் சிங் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிடப்பட்டனர். அவர்களுக்காக நாம் வணக்கம் செலுத்த வேண்டும்” என்று பேசினார்.

நேருவும் பட்டேலும் 74 வயதுக்கு மேல் வாழ்ந்தவர். வயோதிகம் காரணமாகவே இறந்தவர்கள். நேதாஜியின் மரணம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரையும் தூக்கிடப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது.

இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களின் தலைவராக விளங்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், இப்படி வரலாறு தெரியாமல் பேசலாமா? என விமர்சனம் எழுந்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s