தேசியக் கொடியை எரித்ததற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள திலீபன் மகேந்திரனை, ஸ்வாதி கொலை வழக்கில் தன்னை இணைத்து அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் முருகானந்தம் கொடுத்த புகாரில் கைது செய்துள்ளது காவல்துறை.

திருவாரூர் மாவட்டம் ‌பாஜக தலைவராக உள்ள முருகானந்தம் தன்னைப் பற்றி முகநூலில் திலீபன் தொடர்ந்து அவதூறு செய்திகள் எழுதி வந்தது குறித்து குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ‌காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டார். அவருடைய முகநூல் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 9 வரை திலீபனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.