ஒடிஷா மாநிலம் காலஹந்தியில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த மனைவியின் உடலை கணவர் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

பாலாசூர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதி 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் ரயில்வே ஊழியர்கள் அந்த பெண்ணின் எலும்பை உடைத்து கம்பு ஒன்றில் கட்டி எடுத்துச்சென்றனர். உடலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒட்டுநர் 3 ஆயிரத்து 500 ரூபாய் கேட்டதாகவும் ஆனால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யமுடியாது என்பதால் வேறு வழியின்றி ஊழியர்களை வைத்து உடலை எடுத்துச்சென்றதாக ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் பிரதாப் ருத்ரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் மனித உரிமை ஆணையம் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.