மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தை மீண்டும் 12 வாரங்களுக்கள் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து 10 ஆண்டுகள் விவசாயிகள் தவித்து வந்ததால், அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை அவர்கள் திரும்பத் தர தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிங்கூர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது சட்டவிரோதம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.