இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இதற்கான தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களும் பங்கேற்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஜம்ஷெத் அன்சாரி தாக்கல் செய்திருந்த பொதுநல மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.