இடதுசாரிகள் தமிழகம்

இசைக்கலைஞர் திருவுடையான் குடும்பப் பாதுகாப்பு நிதி தாருங்கள்: தமுஎகச வேண்டுகோள்

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.வேலாயுதம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,
‘தமிழக உழைப்பாளி மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த முற்போக்கு இசைக்கலைஞர் திருவுடையானின் எதிர்பாரா மரணம் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இடதுசாரி இயக்க மேடைகளிலும் பெரியாரிய அம்பேத்காரிய மேடைகளிலும் பல்வேறு தொழிற்சங்க மேடைகளிலும் முற்போக்கான சிந்தனைகளை முன்னெடுக்கும் அனைத்து அரங்குகளிலும் பாடி நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் தோழர் ப.திருவுடையான். வணிகநோக்கம் ஏதுமின்றி, இசைக்காகவே வாழ்ந்து, கொள்கை வழி நின்று, இறுதிமூச்சுவரை முற்போக்குப் பாடல்களைப் பாடியவர் திருவுடையான். இறப்பதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்புவரை பாடிக்கொண்டிருந்தவர் அவர் என்கிற செய்தி நம் மனங்களை உருக்குகிறது.

பொருளாதார ரீதியாக வசதியான பல வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் அவற்றைப் புறக்கணித்து, இயக்கத்தின் உயிர்த்துடிப்பாகத் தன்னை இருத்திக் கொண்ட தோழர் அவர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் ஓர் எளிய கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அவரது குடும்பம் வசதியான பொருளாதாரப் பின்னணி கொண்ட குடும்பம் அல்ல. அவரோடு உடன்பிறந்த சகோதரர்கள், தாய் தந்தையுடன் ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார். ஆகவே, அவருடைய இழப்பில் தவிக்கும் அவரது இணையர் திருமதி.சங்கர ஆவுடையம்மாள், மகன் பழனிபாரதி, இரட்டைக் குழந்தைகளான மகள்கள் அறிவரசி, அன்பரசி ஆகிய இவர்கள் தனித்துவிடப்பட்ட உணர்வுக்கு ஆளாகாமல் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் அவருடைய கூட்டுக்குடும்பம் திகழும் என்பதில் ஐயமில்லை. அன்பு நிறைந்த கூட்டுக்குடும்பம் அது. மூன்று குழந்தைகளுமே படித்துக் கொண்டிருக்கிறார்கள். மகன் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கிப்படித்து வருகிறார். மகள்கள் இருவரும் பிளஸ் டூ வகுப்பில் இருக்கின்றனர்.

மூவருமே அக்கறையுடன் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மிகச்சிறந்த மாணவர்களாகத் திகழ்கிறார்கள். ஒரு மகளையேனும் மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. அவர் இல்லாத குறையை நம்மால் ஈடுசெய்ய முடியாது என்றாலும், குழந்தைகளைப் படிக்க வைக்கும் அவரது கனவை நாம் ஒவ்வொருவரும் ஒரு கை கொடுத்தால் நிறைவேற்றிவிட முடியும். மக்களுக்காகவே பாடிய அக்கலைஞனுக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலியாக அது அமையும்.

ஆகவே ,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுவின் சார்பாக அனைத்துப் பகுதி மக்களையும் நோக்கிக் கரம் கூப்பி, தாராளமாக நிதி வழங்கிடுமாறு பணிவான வேண்டுகோள் விடுக்கிறோம். காலதாமதமின்றிச் செய்ய வேண்டிய உதவி என்பதால் உடனடியாக உங்கள் உதவிக் கரங்கள் நீளட்டும். தமுஎகசவின் மாநிலக்குழுவின் வங்கிக்கணக்கு எண் கீழே தரப்பட்டுள்ளது. அக்கணக்கில் பணம் செலுத்திவிட்டு, மாநிலப்பொருளாளருக்கு அதுபற்றிய விபரத்தை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அவருக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

காசோலைகள்,வரைவுகள் அனுப்புவோர் “Tamilnadu Progressive Writers

and Artists Association’’ என்ற பெயருக்கு எழுதி், கீழ்க்கண்ட பொருளாளர் முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறோம். தமுஎகச மாவட்டக்குழுக்கள் குறைந்தபட்சமாக ஒரு குறிப்பிட்ட தொகையை நிச்சயித்து வசூல் செய்து அனுப்ப வேண்டுகிறோம். நிதி அனுப்பாத மாவட்டமே இருக்கக் கூடாது. திருவுடையான் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒவ்வொருவரும் மனமுவந்து பங்களிப்புச் செய்ய வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த மாதத்தில் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள அவருக்கான அஞ்சலிக் கலைஇரவு மேடையில் இந்நிதி அவருடைய குடும்பத்தாரிடம் வழங்கப்படும். நிதி அளிப்போர் அனைவருக்கும், முகவரி அனுப்பினால், முறையாக வரவுச் சீட்டு அனுப்பி வைக்கப்படும்.. பணம் அனுப்பியோர் பட்டியல், தொகையுடன்,பத்திரிகைகள்/சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும்.

Account Number : 20017963293

Bank of Maharashtra, Pondicherry Branch

Account in the name of : “Tamilnadu Progressive Writers and Artists Association “

IFS Code: MAHB0000458

ZIP code : 605001

MICR Code : 605014002

பொருளாளர் முகவரி:சு.இராமச்சந்திரன், கதவு எண்: 6, அடுக்கு 3,முதல் தளம்,கவிக்குயில் வீதி, அசோக் நகர்,பாண்டிச்சேரி-605008 செல் எண்: 9443069075 email id: revathiramachandran96@gmail.com

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.

தீக்கதிர் செய்தி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.