இஸ்லாமில் மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தாக்கல் செய்துள்ள வழக்கில், அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதற்கு பதிலளித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் மனுவில், சமூக மாற்றம் என்ற பெயரில் குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது என்றும்,தனிப்பட்ட மதரீதியான சட்டவிதிமுறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றியமைக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.