அரவிந்தன் சிவக்குமார்

அரவிந்தன் சிவக்குமார்
அரவிந்தன் சிவக்குமார்

பெறுனர்:

மக்கள் ஜனாதிபதி. மன்னர் மன்னன் அவர்கள்,
c/o பொன்னூஞ்சல்,
பாப்பிரெட்டி பவன்
தருமபுரி.

மதிப்புக்குரிய மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களே,
ஒரு முக்கிய நிகழ்வை உங்கள் பார்வைக்கு கொண்டுவர விழைகிறேன். நேற்று கொத்தவால் சாவடியாக இருந்து மறைந்து போன இடத்துக்கு பக்கத்தில் பந்தர் தெரு முனையில் வீதியில் கடைவைத்து வயிற்று பிழைப்பு நடத்தும் ஒரு தெருக்கடை வியாபாரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏன் தெரியுமா? அவர் டிராபிக் ராமசாமி என்னும் நபரை தாக்கினார். ஒருவர் மற்றொருவரை தாக்குவது இ.பி.கோ.வின் படி குற்றம் என்று தெரிந்தும் அவர் ஏன் தாக்கினார்? கடைத்தெருவில் வயிற்று பிழைப்புக்கு மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி வாங்கி, கீரை விற்கும், கொய்யா விற்கும், பிளாஸ்டிக் சாமான் ,பொம்மை விற்கும் ஏழை பாழை தெருவோர பிளாட்பாரம் வியாபாரிகள். அவர்கள் ,பொது ஜனங்களுக்கு நடக்கவழிவிடாம தெருவை மறைச்சு இடையூறு ஏற்படுத்துரதா அரசாங்கத்துக்கு அனுப்ப வீடியோ படம் பிடிச்சுசாரு டிராப்பிக் ராமசாமி.

ஏற்கெனவே பாண்டி பஜார் நடைபாதை காலியாச்சு, எத்தனை பேர் தூக்குல தொங்கனான்னு தெரியல, இப்ப பூக்கடை தெருவோரமும் காலியாகணும், தெருவுல ஜனங்க ஃபிரீயா நடக்கணுமாம், அதான் அவர் லட்சியம். நான்கு அய்ந்து தலைமுறையா மெட்ராஸ் பூர்வகுடியா இருந்தவங்கள ஒழிச்சு கட்ட அரசு பல திட்டம் தீட்டி செயல்படுத்திவரும் இவ்வேளையில் நாளை தன் குடும்பத்தை, குழந்தையை, காப்பாற்ற முடியாமல் தூக்கில் தொங்கவிட நினைக்கும் மிஸ்டர் டிராபிக் ராமசாமியை அவர் கோபத்தில் அடிக்க முயற்சித்தார். மீட்டர் , ராக்கெட் வட்டிக்காரனுக்கு இன்று  யார் தண்டல் கொடுத்திருப்பா?அவர் குடும்பம் என்ன ஆகுயிருக்கும், நாளை ஆகவேண்டுமோ இன்றே கூட நடந்திருக்கலாம்?

பிகு:

மேலும் தமிழகத்தில் ஜோக்கர் என்ற படம் வேற்றி நடைப்போட்டு பொளந்துகட்டுகிறது மக்கள் ஜனாதிபதி அவர்களே. அதில் பெட்டி கேஸ் பொன்னூஞ்சல் என்ற ஒரு கேரக்டர் வருவார். அவரைப் பற்றி புரட்சி இயக்குனர் குறிபிடுகையில் டிராபிக் ராமசாயின் உருவ, மற்றும் அறம் சார் கோபத்தின் மறுஉருவம் பொன்னூஞ்சல் என்றார்.

நீங்கள் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பவர், உங்களுடன் இருக்கும் பொன்னூஞலும் இப்படி ஜோக்கர் பட டிராபிக் ராமசாமி மாதிரி தானா என்று தெரியவில்லை ,உஷாராய் இருங்கள்.
பகத்சிங்கை திறந்துவிட்டதால் புழல் சிறையில் வாடும் சமூகத்தின்
கடை நிலையிலிருக்கும் கடைதெரு வியாபாருக்கு ஒரு விசிட் வையுங்கள் ,பொன்னூஞ்சல் இல்லாமல்.

நன்றி

இப்படிக்கு,

வில்லாதி வில்லன்,
c/o பிளாட்பார்ம்,
கொற்றவாள் சாவடி பவன்,
மெட்ராஸ்.

அரவிந்தன் சிவக்குமார், அரசு மனநல மருத்துவர்.