சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறும் என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. புதிய உறுப்பினர்களின் சேர்க்கையும் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து செய்தியாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 3 மாத காலத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். இதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு நியமிக்கப்பட்டார். இதையடுத்து நீதிபதி சந்துரு இன்று பத்திரிக்கையாளர் மன்றம் வந்ததார். இரண்டு வாரத்தில் வாக்காளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும் அக்டோபரில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக தேர்தல் குறித்தும், வாக்காளர் பட்டியல் சீராய்வு குறித்தும் செய்தியாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.