தமிழக டீ எஸ்டேட்களின் அடிமை வரலாற்றை பதிவு செய்கிறது எரியும் பனிக்காடு. எஸ்டேட் கூலிகள்  வாழ்க்கை எப்படி சுரண்டப்படுகிறது. அவர்களை எப்படி மலைக்கு வேலை செய்ய அழைத்துவரப்படுகிறார்கள். அங்கு நடக்கும் பாலியல் சுரண்டல், உழைப்பு சுரண்டல், அங்கு எப்பொழுதும் கொட்டிக்கொண்டே இருக்கும் மழை. மழை வந்தாலும் வேலை செய்து கொண்டே இருக்கும் கூலிகள். அவர்கட்கு வரும் நோய்கள், பராமரிக்கப்படாமல் இருக்கும் மருத்துவமனை. மக்களின் உயிரை மதிக்காத துரைகள் என்று பல தளங்களில்  நாவல் செல்கிறது. தமிழில் “ஏழு தலைமுறைக்கு” ஒத்த நாவல் என்று இதை சொல்லலாம். நூல் அறிமுகம் தருகிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன்.

எழுதியவர்: பி.எச்.டேனியல்

தமிழாக்கம்: இரா. முருகவேள்

பதிப்பகம்: பொன்னுலகம்