இந்தியா சர்ச்சை

காவிரி நீர் பிரச்சினை: அப்பாவிகளை அடிப்பது எப்படி தீர்வாகும்?

அருண் பகத்

அருண் பகத்
அருண் பகத்

கன்னட இனவெறி மடையர்கள் செய்த முட்டாள்தனத்துக்கு எதிர்வினையாக சம்பந்தமே இல்லாத, யாரோ ஒரு கன்னடனை அடிப்பது என்ன நியாயம் ? இது எப்படி தீர்வைத் தரும் ? இரு தரப்பிலும் இன்னமும் பகைமை தீ பற்றி எரிவதை மட்டுமே இத்தகைய நடவடிக்கைகள் செய்யும்.

சாதி , மத , இன வெறி மண்டைக்கேறி விட்டால் காரண காரியங்களை ஆராய முடியாது. சரியானத் தீர்வைத் தேட முடியாது.

கர்னாடகாவிற்கு மத்திய படைகள் விரைந்து , அங்கு தமிழர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி , மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு.. கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கஷ்மீர் ம்ற்றும் வடகிழக்கு மாநிலங்களில் , இந்திய தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நசுக்க முகாமிட்டுக் கொண்டிருக்கும் மத்தியப் படைகள். அதே இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க ஏன் கர்னாடகா விரைந்து இனவெறியர்களை கட்டுப்படுத்தக் கூடாது ?

இரண்டு மாநிலங்களை மோதவிட்டு , இனவெறி அரசியலை கொளுந்து விட்டு எரியச்செய்து.. மத்திய அதிகாரம் இதில் குளிர் காய்ந்துக் கொண்டிருப்பதை இன வெறி உச்சத்துக்கு ஏறிய மனங்களால் பகுத்தாராய முடியாது.

எங்கோ ஏற்பட்ட இந்து – இஸ்லாமிய பிரச்சினைக்கு , கண்ணில் படும் இஸ்லாமியர்களையெல்லாம் தாக்கும் காவி வெறியர்களின் செயலுக்கும் , இனவெறியர்களின் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இனவாதம் – மதவாதம் ஒரே குணாம்சத்துடன் இருப்பது மிக இயற்கையானது.

அருண் பகத், குறும்பட இயக்குநர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s