தண்ணீருக்கான பொதுமேடை விடுத்துள்ள அழைப்பு:

முன்னதாக கொச்சின், வல்லார்பாடத்தில் சுமார் 3500 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்ட சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையமானது, அதன் மெகா ஊழல்,நிதி மோசடிகளாலும் அதிக வாடகை வசூலாலும் தோல்வியடைந்த திட்டமாக உள்ளது. ஆண்டுக்கும் சுமார் 10 லட்சம் சரக்கு பெட்டகங்களையாவது கையாளவேண்டிய அத்துறைமுகம் அதன் சரிபாதி பங்கு கூட நாளது வரை கையாளவில்லை.

இத்தகைய சூழலில் வல்லார்பாத்திலிருந்து 105  நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள விளிஞ்ஞத்தில் சுமார் 7525 கோடி மதிப்பீட்டில் இதேபோன்று மற்றொரு சரக்கு பெட்டக மாற்று முனையத் துறைமுகத்தை அதானி கட்டுவதே நகைப்புகுரியதாக உள்ளது. இத்தகைய சூழலில் அங்கிருந்து சிறுது தூரமே உள்ள இனையதில் மற்றொரு சரக்கு பெட்டக மாற்று முனையத் துறைமுகத்தை அமைப்பது கேலிக்கூத்து தவிர வேறொன்றுமில்லை. சுமார் 1830 ஏக்கர் பரப்பளவில் வரவுள்ள இத்துறைமுகத்தாலும் அதை ஒட்டிய இதர சாலைக் கட்டுமானத்திற்கும் பெரும் எண்ணிக்கையில் மீனவ மக்கள் புலம் பெயர்தலும், சூழலியல் தாக்கங்களும் ஏற்படும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பாஜகவின் அடையாள அரசியல் நலன் மற்றும் துறைமுக கட்டுமான குத்தகைதார்களின் நலன்களைத் தாண்டி இத்திட்டத்தால் மக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?

விவாதிப்போம்,

பழவேற்காடு முதல் இனையம் துறைமுகம்வரை

நெய்தல் திணையின் அழிவும், தமிழக மக்கள் வாழ்வியல் சிதைவும்

கருத்துரை: தோழர் வறீதய்யா கான்ஸ்தந்தின்
இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை (கன்னிமரா நூலகம் எதிரில்)எழும்பூர் | நாள்:13.09.2016 | நேரம்: மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை

ஒருங்கிணைப்பு: தண்ணீருக்கான பொது மேடை
தொடர்புக்கு: 9842391963| 9566295902