கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவினார்.  தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக மாநில அமைப்பு செயலாளர் பதவியும், செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், செய்தி தொடர்பு குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் விஸ்வநாதன் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ’ என அறிவித்துள்ளார்.