வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார் என செய்தி வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை. அறை மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனை இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், கையில் காயமடைந்த அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் 6 தையல்கள் போடப்பட்டிருப்பதாக சொல்கிறது அந்தச் செய்தி.

தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் தாக்குதலுக்கான காரணம் குறித்து எதுவும் சரிவரத் தெரியவில்லை என்று பேரறிவாளன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

முகப்பில் கோப்புப் படம்.