மலையாளிகள் விமர்சையாகக் கொண்டாடும் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பாஜக தலைவர் அமித் ஷா. ஆனால் அவர் ஓணம் வாழ்த்து சொல்லவில்லை. வாமன ஜெயந்தி வாழ்த்து சொன்னார். தொல் மலையாளிகளின் (திராவிடர்களின்) அரசரான மகாபலியின் நினைவாக ஓணம் கொண்டாடப்படுகிறது.  அவரை அழித்த பார்ப்பன வாமனனின் பிறந்த நாளுக்கு வாமன ஜெயந்தி வாழ்த்து சொல்லி தங்களுடைய ஆர். எஸ். எஸ். சிந்தாந்தத்தைத் திணித்தார் அமித் ஷா.

இந்த ட்விட்டர் பதிவு வெளியான உடனே, மலையாளிகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானார் அமித் ஷா. ஆர் எஸ் எஸ் திணிப்புகளை ஒருபோதும் மலையாளிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பார்ப்பனீயத்தை எதிர்த்து உருவான ஓணத்தை ஒருபோதும் திராவிட பாரம்பரியத்தில் நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்றும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் கேரள முதலைமைச்சர் பினராயி விஜயன், தன்னுடைய ட்விட்டுக்கு வருத்தம் தெரிவித்து அமித் ஷா அதை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.