கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்புகள் வன்முறைச் சம்பவங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இங்கே இருக்கும் சில தமிழ் அமைப்புகள் கர்நாடகா வங்கி முன்போராட்டம் நடத்தின. கர்நாடக வண்டிகளும் தாக்கப்பட்டன.

தமிழகத்தில் வாழும் கன்னட நடிகர்கள் சிலருக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் என அறியப்படும் ரஜினிகாந்த், பிரவுதேவா, ரமேஷ் அரவிந்த், பாபி சிம்ஹா ஆகியோரது வீடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.