தமிழர்களைத் தாக்கி உடைமைகளைச் சூறையாடும் கன்னட இனவெறி அமைப்புகளைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் பல்லாவரத்தில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தினர்.

புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் கனல் தலைமையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் கன்னட இனவெறி காங்கிரஸ் அரசையும் தமிழர்களைத் தாக்கி, உடைமைகளைச் சூறையாடும் பி.ஜே.பி – ஏ.பி.வி.பி உள்ளிட்ட கன்னட இனவெறி அமைப்புகளையும்  துணைபோகும் மோடி அரசையும் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது காவல்துறை.