காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடந்த கலவரத்தின் போது பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாட்டின் கே.பி.என் நிறுவனத்தை சேர்ந்த 52 பேருந்துகள் தீக்கிரையாகின. இச்சம்பவம் காரணமாக, அங்கிருந்த  கேபிஎன் நிறுவனத்தின் 31 ஓட்டுனர்கள் அதிர்ச்சியுடனும், உயிர் பயத்துடனும் தவித்து கொண்டிருந்தனர்.  அபாகயரமான அந்த வேளையில், கர்நாடகாவை சேர்ந்த சாமராஜ்பேட் பகுதியில் “சிவா டிராவல்ஸ்” என்ற  நிறுவனம் நடத்தி வரும் சிவண்ணா என்பவர், இந்த ஓட்டுனர்களை தன்னுடைய லாரிகளில், பத்திரமாக  ஓசூர் அழைத்து சென்றார்.

பற்றி எரிந்த தமிழக பேருந்துகள்; ஓட்டுனர்களை பத்திரமாக கரை சேர்த்த கன்னடர்:நேசங்களில் தழைக்கும் மனிதம்….

இது குறித்து என்டிடிவி.க்கு அளித்துள்ள பேட்டியில் ” “என்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தின் சேவை, பெரும்பாலும் தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உப்பை நான் சாப்பிட்டிருப்பதாக என் மனதில் தோன்றியது. கர்நாடகாத்தில் தவித்த தமிழ் ஓட்டுனர்களை காப்பற்ற வேண்டியது என்னுடைய கடமை என்று நினைத்தேன். அதனால்தான் அவர்களை பாதுகாப்பாக ஓசூர் அழைத்து சென்றேன்” என்று சிவண்ணா நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு சென்ற ஓட்டுனர்கள் அனைவரும், அவருக்கு தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்ததாகவும் சிவண்ணா குறிப்பிட்டுள்ளார்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

என்ற புறநானூறு வாக்கியத்தை சிவண்ணா போன்றவர்களின் மூலம்தான் புரிந்து கொள்ள முடிகிறது.