நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணம் முறிவை சந்தித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

“என் திருமணம் குறித்த செய்தி உண்மைதான். நாங்கள் இருவரும் ஒரு வருடமாகத் தனித்து வாழ்கிறோம். விவாகரத்து பெறுவதற்காக பேசிக்கொண்டிருக்கிறோம். என்னுடைய தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை மதித்து நடந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.