குஜராத் உனா எழுச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் முக்கியமானவரான ஜெக்னேஷ் மேவாணியை அகமதாபாத்தில் கைது செய்துள்ளது குஜராத் காவல்துறை. தலித் ஸ்வாபிமான் சங்கர்ஷ்  என்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊர் திரும்பிய அவரை, எவ்வித காரணமும் சொல்லாமல் குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகவில்லை என அவருடன் போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவிக்கின்றனர்.

குஜராத்தில் பிறந்த நாள் கொண்டாட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி, பட்டேல் ஒதுக்கீடு கோரும் போராட்டக்காரர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.