இந்துத்துவம் சமூக ஊடகம் திராவிட அரசியல்

“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்!” எழுத்தாளர் பாலகுமாரன்

“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மத வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்!” என்று எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய முகநூலில் எழுதியுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி, எழுத்தாளர் பாலகுமாரன் இந்தப் பதிவை எழுதியிருந்தார்:

“என்னுடைய பதினெட்டு வயதில் சிவனின் கோவில் பிரதோஷம் ஊர்வலத்துக்கு ஆளே இருக்காது. வைகுந்த ஏகாதசி நாற்பது நிமிடத்தில் தரசனம். இன்று ஆறு மணி நேரம். பிரதோஷம் தவறாது பெரும் கூட்டம். எல்லா விசேஷங்களுக்கும் கட்டைகட்டி வரிசை. திருப்பதி உண்டியல் தினசரி வசூல் இரண்டு கோடி. வேளாங்கன்னி கடல் போல் ஜனக்கூட்டம். நானூறு கிலோமீட்டர் நடைபயணம். நாகூர்தர்கா போய் வந்தேன் உள்ளே நிறைவு. ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள். ஈரோடு ராமசாமி நாயக்கர் கட்சி ஏற்பட்ட பிறகு வந்த மாற்றம் இது. இந்து மதம் வளர பலர் உதவியிருக்கிறார்கள். அதில் நாயகரும் ஒருவர்.”.

இந்தப் பதிவுக்கு முகநூலில் வந்த எதிர்வினைகள் சில:

Rajesh Dee

எழுத்தாளர் பாலகுமாரன் ரொம்ப பெருமையடிச்சிட்டு இருக்காரு,அவரோட பதினெட்டு வயதில் கோயில்களில் கூட்டமே இருக்காதாம்,ஆனால் இப்போ கூட்டம் அலை மோதுதாம்,அதற்கு ஈ.வெ.ரா கட்சியும் காரணம்னு நன்றி தெரிவித்திருக்காரு.
அய்யா பாலகுமாரு இதோ இந்த போர்டை பாருங்க,சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் தலைவராக இருந்தவர்களின் பட்டியல்,அதில் உங்க பதினெட்டு வயதில் தலைவராக இருந்தவர்களின் பெயருடன் இருந்த ஐயர்,ஐயங்கார் எல்லாம் காணோமே,எங்கே போச்சுங்க,இப்போ தலைவராகவும் துணைத்தலைவராகவும் இருப்பவர்கள் சூத்திரரும் பஞ்சமருங்கோ.

bar-council

Tintoo Sripathi

ஒன்னாங்கிளாஸ் பசங்ககூட மெச்சூடா சண்ட போடுராங்க
இவரு இன்னும் பால்டப்பாவ விடலபோல

அந்த காலத்துல அரசாங்க அலுவலகம், வங்கி, நீதிமன்றம், னு போனா 100 ல 2,3 பேர் மட்டுமே பிராமணர் அல்லாதவர் இருப்பாங்க, ஆனால் இப்போ சரிசமமா அனைத்து சமூகத்தவரும் இருக்காங்க
பெரியர் திராவிட இயக்கத்தை ஆரம்பித்த பிறகு நடந்தது ஆபீசர்

பாலகுமாரன் னு பேர தூக்கிட்டு ‘பால்’ குமாரன் னு வச்சிகோங்க பொருத்தமா இருக்கும்.
முடிதான் வளர்ந்திருக்கு மூளை வளர்ந்தா மாதிரி தெரியல

நல்லவேலை “உடையார்” நூலை இன்னும் படிக்கல..

Bogan Sankar

பாலகுமாரன் சொல்வதில் பிழை இல்லை பெரியார் பண்ணியது நெடும்போக்கில் ஹிந்து மதத்துக்கு constructive criticism ஆக அமைந்தது என்கிறார்.இல்லாவிடில் அது சிறிய ஒரு குழுவின் cult ஆக சுருங்கியிருக்கும் வாய்ப்பிருந்தது.பெரியாரோ நாராயணகுருவோ வராத இந்து மதம் இன்றைய இசுலாம் நேரிடும் தேக்கத்தை இன்னும் கடுமையாக சந்தித்திருக்கும்.

Vinayaga Murugan

பாலகுமாரன் சொன்னதில் தவறில்லை. நாயக்கர் என்று குறிப்பிட்டு எழுதியது அவரது விஷமத்தை காட்டுகிறது. இந்தியாவில் பிறந்தால் ஏதாவது ஒரு ஜாதியில் இருந்தே ஆகவேண்டுமென்பது விதி. ஆனால் அதையெல்லாம் மீறித்தான் பலர் இங்கு முற்போக்கு சிந்தனைகளை சமூக மாற்றங்களை எடுத்துச்செல்கிறார்கள். மூச்சுக்கு முன்னூறு முறை ராமசாமி நாயக்கர் என்று சொல்லி மனஅரிப்பை தீர்த்துக்கொள்கிறவர்கள் ஏன் காந்தி வைசியர் என்று எழுதுவதில்லை?

Mugilan Sure

பார்ப்பனீய சனாதனமான ஜாதியம் தந்தை பெரியாரால் உருகுலைந்து ஜாதி வெறியர்களின் தாங்கு சக்தியில் ஊசலாடிகொண்டிருப்பதை ஏற்க முடியாத பாலகுமாரன் போன்ற ****களெல்லாம் பெரியாரை நாயக்கர் நாயக்கர் என்று ஜாதியை சொல்லி ஆறுதலைடைகின்றன.

Palanivel Manickam

ஜென்டில்மேன் படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனங்களை எழுதிய நல்லவர்தான் இந்த பால குமார அய்யர்வாள். கதை எழுதறதோட நிறுத்தாம நஞ்சை கக்க ஆரம்பித்திருக்கிறார்.

Advertisements

One comment

  1. பார்பனர் மேலுள்ள பொறாமையால் கடவுளை எதிர்க்காதீர். கடவுளை, கடவுள் நம்பிக்கையை எதிர்த்து போராட பெரியார் காலத்திலிருந்து இன்று வரை சரியான காரணம் தெரியவில்லை.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.