ஒவ்வொரு ஆண்டும் எமது தமுஎகச அமைப்பு,சிறந்த இலக்கிய படைப்புகளைத் தேர்வு செய்து படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டி வருகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியான நூல்களில் தமுஎகச விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தேனி நகரில் வாசவி திருமண மண்டபத்தில் 2016 செப்டம்பர் 25 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெற உள்ள விழாவில் இப்படைப்பாளிகள் பாராட்டப்பட இருக்கிறார்கள். இந்நூல்கள் குறித்த அறிமுக அரங்கும் அன்று நடைபெறும் என தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுச்செயலாளர்(பொறுப்பு) கே.வேலாயுதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.சிறந்த நாவலுக்கான அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
நூல் : மெளனத்தின் சாட்சியங்கள்
நூலாசிரியர் : சம்சுதீன் ஹீரா
பதிப்பகம் : பொன்னுலகம்

2. சிறந்த கவிதை நூலுக்கான அமரர் வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது
நூல் : ஆகாயத்தோட்டிகள்
நூலாசிரியர் : பூர்ணா
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

3. சிறந்த சிறுகதை நூலுக்கான அமரர்அகிலா -சேதுராமன் நினைவு விருது
நூல் : புழுதிச்சூடு
நூலாசிரியர் : ம.காமுத்துரை
பதிப்பகம் : வெர்சோ பேஜஸ்

4. சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான அமரர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
நூல் : திப்புசுல்தான்
நூலாசிரியர் : அர்ஷியா
பதிப்பகம் : எதிர் வெளியீடு

5. சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
நூல் : ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
நூலாசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
பதிப்பகம் : அறம் பதிப்பகம்

6. சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான அமரர் தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது
நூல் : சிலப்பதிகாரம் மறுவாசிப்பு
நூலாசிரியர் : தி.சு.நடராஜன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

7.சிறந்த தொன்மைசார் நூலுக்கான அமரர் தோழர் கே.முத்தையா நினைவு விருது
நூல் : பாணர் இனவரைவியல்
நூலாசிரியர் : முனைவர் பக்தவச்சலபாரதி
பதிப்பகம் : அடையாளம்

த மு எ க ச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள்

1. சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது
நூல் : பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்
நூலாசிரியர் : மு.முருகேஷ்
பதிப்பகம் : அகநி

2. சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது
நூல் : ஆதிமொழி
நூலாசிரியர் : முனைவர்.இரா.மதிவாணன்
பதிப்பகம் : ஸ்ரீ வித்யாதிராஜ தர்ம சபா

3.முற்போக்குக் கலை இலக்கிய இயக்கத்துக்கு ஆற்றியுள்ள வாழ்நாள் பங்களிப்புக்கான விருது : மார்க்சிய ஆய்வாளர் தோழர் எஸ்.வி.ராஜதுரை