மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர்களுக்கு எப்போதும் தாங்கள் ஆர். எஸ். எஸ். சாகாவில் பேசுவதைப் போன்றே நினைப்பு. மத்திய அமைச்சர்களானாலும் மாநில முதல்வரேயானாலும் வெறுப்பை கக்குவதில் பொறுப்பில்லாமல் இருப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும். முன்னாள் கோவா முதலமைச்சரும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர்,  இப்படி பேசியிருக்கிறார்:

“டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பிரதமருக்கு எதிராக பேசியிருக்கிறார். இங்கு (கோவாவில்)எனக்கு எதிராக பேசியிருக்கிறார். அவர் நாக்கு நீளமாக வளர்ந்துவிட்டது, என அதை வெட்டி ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆனால் பாவம் அவர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் இருக்கிறார்”.

தேர்தல் வரவிருக்கும் தன் சொந்த கோவா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இப்படி பேசியிருக்கிறார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெகுவாக ஆதரவு பெருகிவரும் நிலையில் ஆம் ஆத்மி முதலமைச்சர் மீது இப்படியான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர்.