கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார், சமயலறையில் மின்சார ஒயர் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் சிறை வளாகத்தில் இருக்கும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மரணமடைந்ததாக ராம்குமாரின் விபத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராம்குமார் இறந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிறைக்குள் நடக்கும் விபத்துகளுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில்தான் அனுமதிக்கவேண்டும். ஏனெனில் இவ்வாறான விபத்துகளை அங்கு முதலுதவி செய்யப்படும். ஆனால் அங்கு ஏன் அனுமதிக்கவில்லை என காரணம் சொல்லவில்லை. அவ்வாறு செய்திருந்தால் விபத்து அறிக்கை சிறை மருத்துவமனைதான் வழங்கியிருக்கும் ராயப்பேட்டை வழங்கவேண்டிய அவசியம் ஏற்படாது என சந்தேகத்தையும் செயல்பாட்டாளர்கள் எழுப்பி வருகின்றனர்.