“ஜாமீன் கேட்டு மனு போட இருந்தநிலையில் காவல்துறை கொன்றுள்ளது” என மரணமடைந்த ராம்குமாரின் அப்பா பரமசிவம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர்,

“25 நாட்களுக்கு முன்புதான் நானும் என் மனைவியும் சிறையில் ராம்குமாரை சந்தித்தோம். அவன் நன்றாகத்தான் இருந்தான். சிறையில் இருப்பதற்காக அழுதான்…ஆனால் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை. முக்கால் மணி நேரம் அவனுடன் பேசிவிட்டு வந்தோம்.

அவன் தற்கொலை செய்துகொண்டதாக பொய்யான தகவல் சொல்கிறார். ஆனால் சதி திட்டம் தீட்டி கொலை செய்திருக்கிறார்கள்.

80 நாள் ஆகிறது. நாளை பெயில் போட இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது” என்ற அவர்,  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டப் பிறகுதான் உடலை வாங்குவோம் என தெரிவித்துள்ளார்.