தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது. இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் இப்போது படத்தொகுப்பாளர் லெனினுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருக்கிறது தமிழ் ஸ்டுடியோ.

இதுகுறித்து வெளியான அறிவிப்பு:

காதலன் திரைப்படத்திற்கு படத்தொகுப்பிற்கான தேசிய விருதை பெற்ற லெனின் இதுவரை ஐந்து முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தன்னுடைய படத்தொகுப்பு உத்தியின் வாயிலாக தமிழ் சினிமாவின் கதைசொல்லும் போக்கை செறிவு படுத்தியவர். படத்தொகுப்பின் விஞ்ஞான வளர்ச்சியில் பங்கெடுத்து இன்றுவரை தொடர்ச்சியாக படங்களுக்கு படத்தொகுப்பு செய்துக் கொண்டிருக்கிறார். குறும்படங்கள், திரைப்படங்கள் என சில படங்களை இயக்கியும் இருக்கிறார். படத்தொகுப்பு சார்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் கலந்துரையாடல்.

பல்வேறு வீடியோக்கள் மூலம், படத்தொகுப்பு உத்தி பற்றி லெனின் சிறு பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கிறார். படத்தொகுப்பு எப்படி ஒரு சினிமாவை உருவாக்குகிறது, எடிட்டரின் டேபிளில் எப்படி சினிமா உருவாகிறது என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை கிடைக்கலாம். தமிழ் சினிமா நூற்றாண்டில் தமிழ் ஸ்டுடியோ நடத்தும், இந்த படத்தொகுப்பு கலந்துரையாடல் மிக முக்கியமான ஒன்று.

18-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.