ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ பட்டாலியன் தலைமையகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
எல்லையில் உரி ராணுவ பட்டாலிய தலைமையகத்திற்குள் காலை 4 மணியளவில் புகுந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். பின்னர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட தீயினால் பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டையில் தாக்குதல் நடத்திய நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர்.