சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு குறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதாக ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி உயரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.