ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார ஒயர் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை; அவரை காவல்துறைதான் கொலை செய்துள்ளது என வழக்கறிஞர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல அமைப்பினர் ராயப்பேட்டை மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.