நடிகர் அமலா பால் சமீபத்தில் தன்னுடைய திருமண உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். இது குறித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக பேசப்பட்டது. இந்நிலையில்,

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட அமலாவின் படத்தைப் பகிர்ந்து அதில், “விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள் என ட்விட்டியுள்ளார் ஒரு நபர். இதை அந்த நபர் அமலா பாலின் பார்வைக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தப் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதற்கு அமலாவின் பதில், “உங்களின் லட்சியம்(அந்த நபர் பெயரில் லட்சியத்தை இணைத்திருப்பதால்) தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்திருக்கிறார்.